இந்த ஆண்டு இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை: ஐ.நா

இந்த ஆண்டு இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை: ஐ.நா


இந்திய மக்கள் கடந்தாண்டை விட இந்தாண்டு மகிழ்ச்சியாக இல்லை என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.


வசந்த காலத்தை வரவேற்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹோலி கொண்டாட்டம் களைக்கட்டியுள்ள இன்றைய நாளில், இந்தாண்டில் இந்தியர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்ற தகவலை ஐ.நா வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் வசிக்கும் மக்களின் மகிழ்ச்சி குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் கடந்தாண்டை விட இந்தாண்டில் இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என ஐ.நாவின் World Happiness Report-ல் (உலக மக்களின் மகிழ்ச்சியை கணக்கிடும் அறிக்கை) தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி உலகளவில் மகிழ்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு நேற்று மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி, மக்களின் வருமானம், சமத்துவம், சமூக ஆதரவு, அரசின் மீதான நம்பிக்கை, ஆயுட்காலம், சுதந்திரம் (எல்லா வித அடிப்படையில்) ஆகியவற்றின் மகிழ்ச்சிக்கான அளவீடுகள் கணக்கிடப்பட்டன.

18total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: