கிரிக்கெட் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.

கிரிக்கெட் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.


இங்கிலாந்தில் நடக்க இருக்கும் கிரிக்கெட் விளையாட்டிற்கான உலக கோப்பைக்கு இந்திய அணி வீரர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  15 பேர் கொண்ட  இந்த அணி விராட் கோலி தலைமையில் உலக கோப்பையில் விளையாடும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. மொத்தம் 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கிறது. 1992ல் பென்சன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலக கோப்பை முறையில் இந்த தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தர வரிசைப்படி தகுதி பெற்றுள்ளன. மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்து இருந்தது போலவே விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அணி விவரம்:

 1. விராட் கோலி (கேப்டன்),
 2. ரோகித் சர்மா (துணை கேப்டன்),
 3. ஷிகர் தவான்,
 4. கே.எல்.ராகுல்,
 5. விஜய் சங்கர்,
 6. தோனி (விக்கெட் கீப்பர்),
 7. கேதர் ஜாதவ்,
 8. தினேஷ் கார்த்திக்,
 9. ஹர்திக் பாண்டியா,
 10. குல்தீப் யாதவ்,
 11. சகால்,
 12. ஜஸ்பிரீத் பும்ரா,
 13. புவனேஷ்வர் குமார்,
 14. முகமது சமி,
 15. ரவிந்திர ஜடேஜா.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ஐசிசி, அனுமதி இல்லாமலேயே வரும் மே 23ம் தேதி வரை பிசிசிஐ மாற்றம் செய்து கொள்ள முடியும்.

எது எப்படியோ தமக்கு பிடித்த நாயகர்கள் களத்தில் இறங்குவார்களா? என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. இந்த உலகக் கோப்பை தொடரிலும் உலக கோப்பையை நமது அணி கைப்பற்றும் என்று நம்புவோம்.
Leave a Reply

%d bloggers like this: