சவுதி அரேபியா இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி!

சவுதி அரேபியா இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி!சவூதி அரேபியா சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை சேர்ந்த அஜ்மல்கான் உடல் கடந்த வாரம் 05.07.2019 அன்று ஜும்ஆவுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது!

கடந்த 25.06.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் சவூதிஅரேபியா அல்ஹஸ்ஸாவுக்கு அருகே குரைஷி ஏரியாவில் பிக்அப் மீது டிரைலர் என்னும் கனரக வாகனம் மோதியது.

இந்த விபத்தில் பிக்அப் ஓட்டுனர் அஜ்மல்கான்(வயது 25) சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த அல்ஹஸ்ஸா சகோதரர் யூசுப் மற்றும் தம்மாம் சகோதரர் இஸ்மாயில் ஆகியோர் உடனே இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில நிர்வாகம் அல்ஹஸ்ஸா பகுதி பொறுப்பாளர் ஜின்னாவை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

தலைமையின் உத்தரவை ஏற்று விபத்தில் பலியான அஜ்மல்கான் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனை சென்று ஜனாஸாவை பார்த்து விட்டு நல்லடக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதப்படுத்தினார்.

விபத்து தொடர்பான காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை சான்றுகளை பெற்று இந்திய தூதரகத்தின் உதவியோடு இறந்தவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  • இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து விசயத்திலும் இறந்தவர் பணியாற்றிய அவரது கம்பெனி மற்றும் இந்திய தூதரகம் முழுமையாக ஒத்துழைப்பை கொடுத்தது நினைவு கூறத்தக்கதாகும்.

இறந்தவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, இறந்தவரை நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து முடித்த  இந்தியன் சோஷியல் ஃபோரம் அல்ஹஸ்ஸா பொறுப்பாளர் சகோதரர் ஜின்னா மற்றும் அல்ஹஸ்ஸா கிளை நிர்வாகிகளுக்கு இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபோரம் மத்திய, மாநில நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

தகவல்: இந்தியன் சோஷியல் ஃபோரம் – சவுதி அரேபியா (பேஸ்புக் பக்கம்)

Leave a Reply

%d bloggers like this: