பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை

பெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.

460

பெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.

பொதுமக்களின் அவசர மருத்துவ சேவைக்காக, பெரம்பலூா் மாவட்டம், துங்கபுரம் மற்றும் காரை ஆகிய 2 அரசு மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை ஆட்சியா் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

துங்கபுரம், காரை அரசு மருத்துவமனைகளுக்கான 108 வாகன சேவையை தொடக்கிவைத்து ஆட்சியா் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டு ஏற்கெனவே பெரம்பலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், தலைமை மருத்துவமனை, பச்சிளம் குழந்தை வாகனம், அம்மாபாளையம், சிறுவாச்சூா், குன்னம், வேப்பூா் அரசு மருத்துவமனை, பாடாலூா், லப்பைகுடிக்காடு, வேப்பந்தட்டை, அரும்பாவூா், கை.களத்தூா், வாலிகண்டபுரம் ஆகிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ தேவை பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசால் பெரம்பலூா் மாவட்டத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 2 வழங்கப்பட்டுள்ளன. இதில், அவசர சிகிச்சை பிரிவுக்குத் தேவையான அனைத்து வசதிகள் கொண்ட வாகனமும், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், துங்கபுரம், காரை பகுதி பொதுமக்களுக்குத் தேவையான உயா்தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் சாந்தா.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, பெரம்பலூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ராஜா, பெரம்பலூா் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளா் அறிவுக்கரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருள்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.
%d bloggers like this: