ஆன்லைனில் பிச்சை எடுத்து 50,000 டாலர் சம்பாதித்த பலே கில்லாடி லேடி.

ஆன்லைனில் பிச்சை எடுத்து 50,000 டாலர் சம்பாதித்த பலே கில்லாடி லேடி.

சமூகத் தளங்களில் தமது குழந்தைகளின் படம் போட்டு ஆன்லைனில் உதவி கேட்டுச் சம்பாதித்த பெண்ணை துபாய் காவல்துறை கைது செய்துள்ளனர். தான் ஒரு விதவையென்றும், தமது குழந்தைகள் உடல் சுகமில்லாதவர்கள் என்றும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் ஆகியவற்றில் விளம்பரம் செய்து இப்படிச் சம்பாதித்துள்ளார். இல்லை பிச்சை எடுத்துள்ளார். ஆம் இது நவீன ஆன்லைன் பிச்சை. இப்படி இவர் பிச்சை எடுத்துச் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா ரூபாய் 34.5 லட்சம் (திர்ஹம் 1,83,500).  அதுவும் வெறும் பதினேழு நாளில்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈகை திருநாள்

இந்த ஆன்லைன் பிச்சை எடுத்த சம்பாதித்தவர் ஐரோப்பியர் என்பதை மட்டும் துபாய் காவல்துறை அறிவித்துள்ளது. அவருடைய பெயர், வயது விபரங்களை தெறிவிக்கவில்லை.

இதைப் பற்றிய விபரங்களைத் துபாய் காவல்துறையின் புலனாய்வுத் துறை இயக்குநர் கூறும் போது. இந்தப் பெண் தமக்காக வங்கி கணக்கு துவக்கியுள்ளார். பிறகு தமது சமூக ஊடக கணக்குகளின் வழியாகத் தான் ஒரு விதவை என்றும் தமது குழந்தைகள் உடல் நிலை சரியில்லாதவர்கள் என்று அறிவித்துள்ளார். தமது குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு பணத் தேவை இருப்பதாகவும் அறிவித்தார். அத்தோடல்லாமல் தமது குழந்தைகளின் புகைப்படங்களையும் அந்த தளங்களில் பதிவேற்றியுள்ளார். இதைப் பார்த்த பலரும் அவர் கொடுத்துள்ள வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பியுள்ளனர்.

காவல் துறையிடம் சிக்கினார்.

இந்த விபரங்களை அறிந்த அவருடைய முன்னால் கணவர் இது பொய்யான தகவல் என்பதைத் தெரிவித்து விட்டார். தனது முன்னால் மனைவி சமூகத் தளங்களில் வெளியிட்டுள்ள தகவல் பொய்யானதென்றும், தமது குழந்தைகள் தம்மிடம் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது முன்னால் மனைவியின் இந்த செயலை பார்த்த உறவினர்கள், நண்பர்கள் என்னிடம் பொருளாதாரப் பிரச்சனையா என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். அதைத் தொடர்ந்து புகார் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனடிப்படையில் அந்த பெண்ணை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

துபாயில் பிச்சை எடுப்பது குற்றமாகும். நேரடியாகப் பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்பட்டால் 3 மாதம் சிறையுடன் ஐந்தாயிரம் திர்ஹம் (ரூபாய் 95,000)அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுபோல ஆன்லைனில் மோசடி செய்தால் 6 மாத சிறையுடன் ஒரு லட்சம் திர்ஹம் (ரூபாய் 18.75 லட்சம்) அபராதம் ஆகும்.

கடந்த ரமலான் மாதம் மட்டும் துபாயில் பிச்சை எடுத்த 43 பெண்கள் உட்பட 128 பேரைத் துபாய் காவல்துறை கைது செய்துள்ளனர். இதில் அதிகமானோர் விசிட்டில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவிக் கேட்போருக்கு உதவுவதற்கு உலகில் எத்தனையோ பேர் தயாராகத்தான் உள்ளார்கள். அதை முறையில்லாமல் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கூட்டமும் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.

யாரைத்தான் நம்புவதோ, எதைத்தான் நம்புவதோ ஒன்னுமே புரியல உலகத்துல.

 
Leave a Reply

%d bloggers like this: