காவிரி நீர் கேட்டு பெரம்பலூர் ஆட்சியரகம் முற்றுகை

காவிரி நீர் கேட்டு பெரம்பலூர் ஆட்சியரகம் முற்றுகை




காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கிடக் கோரி செல்லியம்பாளையம் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், செல்லியம்பாளையம் கிராம மக்களுக்கு பொது இடத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலமாக 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. அதுவும் பற்றாக்குறையான அளவில் விநியோகம் செய்யப்படுகிறதாம்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீருக்காக குழாய் அருகே நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாம். இதனால் அவதியுற்ற பொதுமக்கள் ஊராட்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லையாம்.

இதனால் ஆத்தரமுற்ற சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், சீராக குடிநீர் விநியோகம் செய்யவும், தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து கலைந்து சென்றனர்.

தினத்தந்தி


மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்






Leave a Reply

%d bloggers like this: