அரியலூர் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 473 கோரிக்கை மனுக்கள்

அரியலூர் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 473 கோரிக்கை மனுக்கள்


அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 473 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் டி.ஜி.வினய் பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்ற 473 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், சமூக பாதுகாப்புத்திட்ட துணை ஆட்சியா் ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: