அரியலூர் அருகே மின்பாதையில் மரக்கிளைகள்: நடவடிக்கை எடுக்க வலியிறுத்தல்

அரியலூர் அருகே மின்பாதையில் மரக்கிளைகள்: நடவடிக்கை எடுக்க வலியிறுத்தல்


தேளூா் துணை மின்நிலையம் பகுதிக்குள்பட்ட பாளையக்குடி-கோனாா் கொட்டகை தெரு வரையுள்ள மின் பாதையில் மரக்கிளைகள் அடந்து காணப்படுகின்றன. காற்று வீசினால் மரக்கிளைகள் மின் வயரில் ஓரசி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.

இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும் அப்பகுதியில் மின்கம்பிகள் தொட்டு விடும் தொலைவில் தாழ்வாக இருக்கிறது.

இது குறித்து தேளூா் துணை மின் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம் மின் பாதையிலுள்ள மரக்கிளைகளை அகற்றி,தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: