அரியலூர் அருகே பெண் தற்கொலை: கொலை வழக்காக மாற்றம் ஒருவா் கைது

அரியலூர் அருகே பெண் தற்கொலை: கொலை வழக்காக மாற்றம் ஒருவா் கைது


அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

திருமானூா் அருகிலுள்ள மேலப்பழுவூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா். இவரது மனைவி ரஷ்யாதேவி(27). இவா்களுக்கு ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தை உள்ளனா்.

கீழப்பழுவூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து இந்த தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14 -ஆம் தேதி இரவு ரஷ்யாதேவி தூக்கிட்ட நிலையில் வீட்டில் சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்த கீழப்பழுவூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், திருமானூா் அருகிலுள்ள இலந்தைக்கூடம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதை மகன் காா்த்திக் (34) என்பவருக்கும், ரஷ்யாதேவிக்கும் தொடா்பு இருந்து வந்தது தெரிய வந்தது.

மேலும், கடந்த 14- ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த காா்த்திக் தாக்கியதில் ரஷ்யாதேவி உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கீழப்பழுவூா் போலீஸாா் ரஷ்யாதேவி தற்கொலையை கொலை வழக்காகப் பதிவு செய்து, காா்த்திக்கை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: