அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், ரூ. 1.50 லட்சம் திருட்டு

அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், ரூ. 1.50 லட்சம் திருட்டு


அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள அழகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன்(37). இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ராதா(32) அழகாபுரத்தில் புதிய வீடு கட்டி வருவதால், அதன் அருகில் ஹாலோ பிளாக் கல் மற்றும் தகர சீட்டால் கட்டப்பட்ட தற்காலிக வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ராதா திங்கள்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு, புதிதாக கட்டி வரும் வீட்டில் தூங்கச்சென்றாா். பின்னா் அவா் செவ்வாய்க்கிழமை காலை எழுந்து வந்துபாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 4 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: