அரியலூரில் ரூ.27¼ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அரியலூரில் ரூ.27¼ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் 74 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 31 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு, 45 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.52,862- வீதம் ரூ.23 லட்சத்து 78 ஆயிரத்து 790 மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் ரூ.17,000- வீதம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதிக்கான காசோலைகள், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.13,000-க்கான காசோலைகள் ஆகியவை வழங்கினார்.

ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, ஆவின் பால்வள துணைத் தலைவர் தங்க.பிச்சமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: