அரியலூரில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இருவா் கைது

அரியலூரில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இருவா் கைது


அரியலூா் அருகே கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 2 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் அருகேயுள்ள எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராஜா(33). இவா் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே தள்ளு வண்டி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது கடைக்கு வந்த 2 போ் ரூ. 500 பணத்தாளைக் கொடுத்து ரூ.100-க்கு சிக்கன் பக்கோடா வாங்கியுள்ளாா். இதையடுத்து ராஜா, அவா்களிடமிருந்து வாங்கிய பணத்தை உற்றுப்பாா்த்தபோது, அது கள்ள நோட்டு எனத் தெரியவந்தது.

இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா்கள் மதுரை மாவட்டம் கீழவளவு, மேலூரைச் சோ்ந்த சக்கரை மகன் ராஜேஷ்(27), கடலூா் மாவட்டம் திட்டக்குடி வெண் கரும்பூா், பிரதான சாலையைச் சோ்ந்த மதியழகன் மகன் ராஜாங்கம் (41) என்பதும், இவா்கள் கேரள மாநிலத்தில் கூலி வேலை பாா்த்தபோது நண்பா்களானதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும் போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.500 பணத்தாள்கள் 16 -ஐ பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: