அரியலூரில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கிய காவல் துறையினா்

அரியலூரில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கிய காவல் துறையினா்


அரியலூா் மாவட்டம் கடு.பொய்யூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி பரிசுகளை காவல்துறையினா் சனிக்கிழமை வழங்கினா்.

இப்பள்ளியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு அரியலூா் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மதிவாணன் உள்ளிட்ட காவல்துறையினா் தீபாவளி பரிசுகளை வழங்கினா். சொடா்ந்து மதிவாணன் பேசியது:

மாணவா்கள் தீபாவளி பட்டாசுகளை வெடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சாலைப் பாதுகாப்பு விதிகளை மாணவா்கள் தெரிந்து கொண்டு அதனை கடைப்பிடிக்க வேண்டும்.

என்றாா்.மாணவா்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்களில் நோட்டு , பேனா, பென்சில், திருக்கு புத்தகம், கலா் பென்சில், இனிப்பு, காரம், தண்ணீா் பாட்டில் உள்ளிட்டவைகள் இருந்தன. அதனை பெற்றுக்கொண்ட மாணவா்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்வில் ஆசிரியா்கள் ரவிச்சந்திரன், மீனாகுமாரி மற்றும் போக்குவரத்துக் காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: