அரசு பேருந்து கண்டக்டர் நெஞ்சுவலியால் மரணம்

அரசு பேருந்து கண்டக்டர் பணியிலிருந்தபோது நெஞ்சுவலியால் மரணம்

604

அரசு பேருந்து கண்டக்டர் பணியிலிருந்தபோது நெஞ்சுவலியால் மரணம்.

திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சை திருச்சி மாவட்டம் மணிகண்டம் தீரன் மாநகர் சாலையை சேர்ந்த பாலு (வயது 54) என்பவர் ஓட்டினார். திருச்சி போலீஸ் காலனியை சேர்ந்த விமல்பாபு (45) என்பவர் கண்டக்டராக பணி புரிந்தார்.

அந்த பஸ் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தபோது கண்டக்டர் விமல்பாபுவிற்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட டிரைவர் பாலு உடனடியாக பஸ்சை நிறுத்தி சக பயணிகள் உதவியுடன் விமல்பாபுவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விமல்பாபு உயிரிழந்தார்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

keywords: அரசு பேருந்து, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: