தமிழில் நன்றாக எழுத படிக்க தெரியுமா? அரசாங்க வேலை ரெடி.

தமிழில் நன்றாக எழுத படிக்க தெரியுமா? அரசாங்க வேலை ரெடி.

திருவள்ளூர், முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

நிர்வாகம் : திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு பணி மற்றும்

காலிப் பணியிட விபரங்கள் :-

பணி : அலுவலக உதவியாளர் – 48

ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

பணி : கணினி இயக்குபவர் – 07

ஊதியம் : மாதம் ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரையில்

பணி : இரவு நேரக் காப்பாளர் – 10

பணி : ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் – 13

ஊதியம் : மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்

பணி : ஓட்டுநர் – 02

ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

பணி : துப்புரவுப் பணியாளர் – 05

பணி : மசால்ஜி – 15

ஊதியம் : மாதம் ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையில்

பணி : இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 10

ஊதியம் : மாதம் ரூ. 15,700 முதல் ரூ.62,000 வரையில்

கல்வித் தகுதி : கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/tiruvallur என்னும் இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள், முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டம் – 637003

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 30.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment-Notification%202019-Tiruvallur_0.pdf என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

 

மேலும் வேலை வாய்ப்பு செய்திகளுக்கு.

 

29total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: