அமீரக தேசிய தின விடுமுறையில் விதிமுறைகளை மீறினால் அபராதம்..!!

அமீரக தேசிய தின விடுமுறையில் விதிமுறைகளை மீறினால் அபராதம்..!!

759

அமீரக தேசிய தின விடுமுறையில் விதிமுறைகளை மீறினால் அபராதம்..!!


Gulf News: Penalties for violating the rules on the UAE National Day holiday


அமீரக தேசிய தின விடுமுறையில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமீரக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து வாகனத்தில் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம் நாளை டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடவிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க உரிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று துபாய் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

அமீரகத்தில் வசிக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பான சமூக இடைவெளியை உறுதிசெய்து எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று துபாய் காவல்துறையின் போக்குவரத்துத் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். அமீரக அரசு வகுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக காவல்துறை ரோந்து வாகனங்கள் முழு வீச்சில் செயல்படும் என்றும் துபாயின் முக்கிய பகுதிகளான டவுன்டவுன் துபாய், ஜுமைரா பீச் ரெசிடென்ஸ், லா மெர் மற்றும் ஃபெஸ்டிவல் சிட்டி போன்ற சுற்றுலா தலங்களில் காவல் துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் அமீரகம் முழுவதும் தேசிய தின கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் கொரோனாவின் காரணமாக பொது நிகழ்வுகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் கட்டுப்பாடுகளை அமீரக அரசு விதித்துள்ளது.

keywords: gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil,
%d bloggers like this: