அமீரகத்தில் ரமலானையொட்டி தனியார் நிறுவனங்களின் வேலை நேரம் குறைப்பு!

அமீரகத்தில் ரமலானையொட்டி தனியார் நிறுவனங்களின் வேலை நேரம் குறைப்பு!


வரும் 6ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் துவங்க அதிக வாய்ப்புள்ளது. அதனையொட்டி தனியார் தொழில் துறை நிறுவனங்கள் எப்போதும் உள்ள வேலை நேரங்களிலிருந்து 2 மணி நேரம் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புனிதமிக்க ரமலான் மாதமானது இஸ்லாமிய காலெண்டரில் 9வது மாதமாக இருக்கிறது. இம்மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பிருப்பார்கள். வரும் 6ஆம் தேதி முதல் வளைகுடா நாடுகளில் ரமலான் துவங்க அதிகமான வாய்ப்பிருப்பதாக  வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ரமலான் மாதத்தில் தனியார் நிறுவனங்களின் வேலை நேரத்தில் 2 மணி குறைக்க வேண்டுமென்று  ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வள அமைச்சகத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரமலான் 29 அல்லது 30 நாட்களாக இருக்கும். அடுத்து வரும் நாளான ஈதுல் பித்ர் அதை தொடர்ந்து இரண்டு நாட்களும் அரசு விடுமுறையாகும்.

இந்த ரமலான் மாத காலங்களில் துபை மெட்ரோ மற்றும் ட்ராம் எப்போதும் போலவே இயங்கும். அதாவது மெட்ரோ வார நாட்களில் இரவு 12 மணிவரையிலும், வார இறுதியில் 1 மணி வரையிலும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில்  பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
Leave a Reply