அமீரகத்தில் ஈதுல் அத்ஹா என்னும் பக்ரீத் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு

அமீரகத்தில் ஈதுல் அத்ஹா என்னும் பக்ரீத் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.


ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை ஈதுல் அத்ஹா என்னும் பக்ரீத் பெருநாள் கொண்டாட உள்ளனர். இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் நாளை மறுதினம் திங்கள் கிழமை இப்புனித பெருநாள் கொண்டாட உள்ளனர்.

இந்த புனிதமிக்க தினத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையையும் நிறைவேற்றுவார்கள். சிறப்புத் தொழுகை காலை சூரிய உதயத்திற்குப் பிறகு நடைபெறும். ஐக்கிய அரபு அமீரக அனைத்து மாநிலங்களிலும் ஈத்கா என்னும் தொழுகை மைதானத்தில் இந்த சிறப்புத் தொழுகை நடைபெறும். ஒரு சில பெரிய பள்ளிவாசல்களிலும் இந்த சிறப்புத் தொழுகை நடைபெறும்.

அந்த வகையில் நாளைய பெருநாளையொட்டி சிறப்பு தொழுகைக்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி –  காலை 6.12 மணி

துபாய் – காலை 6.07 மணி

சார்ஜா – காலை 6.06 மணி

ராஸ்-அல்-கைமா – காலை 6.04 மணி

புஜைராஃ – காலை 6.04 மணி

உம் அல் குவைன் – 6.06 மணி

அஜ்மான் – 6.06 மணி

அல் அய்ன் – 6.06 மணி

 

-வளைகுடா தமிழன்Leave a Reply

%d bloggers like this: