ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈகை திருநாள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈகை திருநாள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று சிறப்பாக ஈதுல் பித்ர் என்னும் ஈகை திருநாள் கொண்டாடப்பட்டது.

சவ்வால் பிறை நேற்று காணப்பட்டதால் இன்று வளைகுடா நாடுகளில் ஈத் பெருநாள் கொண்டாடப்பட்டது.

ஈதுல் பித்ர் தினத்திற்கான சிறப்பு தொழுகை அபுதாபியில் காலை 05.50 மணிக்கும், அல் அய்னில் காலை 05.44 மணிக்கும், துபாயில் காலை 05.45 மணிக்கும், சார்ஜாவில்  காலை 05.44 மணிக்கும், ராசல் கைமாவில் காலை 05.41 மணிக்கும், புஜைராவில் காலை 05.41 மணிக்கும், உம் அல் குவைனில் காலை 05.43 மணிக்கும், அஜ்மானில் காலை 05.44 மணிக்கும் நடைபெற்றது.

அமீரகத்தின் பல பகுதியிலும் உள்ள வி.களத்தூர் சகோதரர்கள் சிறப்பான முறையில் இந்த ஈகைத் திருநாள் தொழுகையில் கலந்துக் கொண்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Leave a Reply

%d bloggers like this: