விபத்துகளை கட்டுப்படுத்த அபராதங்களை கூட்டி மக்களைவையில் புதியமசோதா

விபத்துகளை கட்டுப்படுத்த அபராதங்களை கூட்டி மக்களைவையில் புதியமசோதா


மக்களவையில் வாகன ஓட்டுநர்களுக்கான அபராத தொகையை அதிகரித்து புதியமசோதா ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் தற்போதுபோக்குவரத்து விதிமீறலுக்கு உள்ள அபராத தொகை அதிகரிக்கப்படுகிறது.

இதுவரை சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 100 ரூபாயாக இருந்த அபராதம் 1000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படும். தலைகவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதத்தோடு 3 மாத காலம் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 ரூபாயும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10000 ரூபாயும், ரேஸ் போன்ற பந்தயத்தில் ஈடுபட்டால் 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

நாளுக்கு நாள் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் அதே சமயம், போக்குவரத்து விதி மீறல்களும், விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இதை தவிர்க்கும் பொருட்டு தற்போதுள்ள போக்குவரத்து அபராத தொகைகளை அதிகப்படுத்தும் புதிய மசோதாவை மத்திய அரசு அங்கீகரித்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த புதிய மசோதாவினால் நாட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு அதிகரிக்கும் என்பதோடு, விபத்துகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply

%d bloggers like this: