அதுக்கு சம்மதிக்காத மனைவியைக் கொன்று தன்னுடைய தையும் வெட்டிய கணவன்.

அதுக்கு சம்மதிக்காத மனைவியைக் கொன்று தன்னுடைய தையும் வெட்டிய கணவன்.


உடலுறவுக்குச் சம்மதிக்காத மனைவியைக் கொலை செய்து விட்டு தன்னுடைய ஆணுறுப்பையும் வெட்டிக் கொண்ட கணவன்.

உத்திரப்பிரதேஷ் மாநிலம், கோரக்பூர் சித்தார்தநகர் அருகேயுள்ள பொகார் கிராமத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. கடந்த வருடம்தான் இந்த தம்பதியினருக்குத் திருமணம் நடந்துள்ளது. சூரத்தில் வேலை செய்யும் ஹசனுக்கு வயது 24, இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஊர் திரும்பியுள்ளார். ஹசனின் மனைவிக்கு வயது 20 வீட்டீல் இருவரும் தனியாக இருக்கும் போது உடலுறவுக்கு வர மறுத்த தனது மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளான். அதோடு தனது ஆணுறுப்பையும் வெட்டிக் கொண்டுள்ளான்.

விவரமறிந்த அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ரத்த வெல்லத்தில் கிடந்த ஹசனை கோரக்பூர் பாபா ராகவ தாஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தனது மகளைத் திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாகப் பெண்ணின் தந்தை புகார் கொடுத்துள்ளார். எனது மகளைத் திருமணம் முடித்ததிலிருந்து வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகத் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

GN7719Leave a Reply

%d bloggers like this: