கூகுள்.காம் அண்டிராய்டு போன்களுக்கான ‘வாய்ஸ்-சர்ச்’ அப்டேட் செய்துள்ளது.

கூகுள்.காம் அண்டிராய்டு போன்களுக்கான ‘வாய்ஸ்-சர்ச்’ அப்டேட் செய்துள்ளது. இது ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கானது அல்ல என்பது கூடுதல் தகவல்.


சத்தமில்லாமல் கூகுள் தனது மொபைல் வெப் வெர்ஷனுக்கு ‘வாய்ஸ் சர்ச்’ அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டிராய்டு போன்களில் உள்ள கூகிள்.காம் இணையதளத்திற்கு “வாய்ஸ் சர்ச்” என்னும் ஆப்ஸன் நீண்டநாட்களாக இல்லாமலிருந்தது.

ஆப்பில் ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் இந்த அப்டேட் வராத நிலையில் இந்த மொபைல் வெர்ஷன் தற்போது குரோம் மற்றும் எட்ஜ் உலாவிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த ‘வாய்ஸ் சர்ச்’ வசதியை கூகுள்.காம்மில் உள்ள சாம்பல் நிற மைக்கை தேர்தெடுத்து பயன்படுத்த முடியும்.

இந்த ஜகான் (icon) கூகுளின் ஹோம் பேஜி மற்றும் தேடுதல் தளத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும் அதை தேர்ந்தெடுப்பதன் மூலம் கூகுள் தளம் நமது கட்டளைக்காக காத்திருக்கும். முழுமையாக கேட்ட பிறகு கட்டளைக்கு பொருத்தமான தேடல் முடிவுகளை தேடுதல் தளத்திற்கு கொண்டு வருகிறது.

கூகுள் வாய்ஸ் ஆசிஸ்டன்டு மூலம் கட்டளைகளை நாம் சொல்ல முடிகின்ற நிலையில், இந்த அப்டேட் டைபிங்கின் அவசியத்தை குறைக்கிறது. ஜபோனில் இன்னும் இந்த அப்டேட் வராத நிலையில் ஜி-போர்டில் உள்ள வாய்ஸ் உதவியார் மூலம் தேடுதல் நடைபெறுகிறது.

5total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: