அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு
பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட, பெரம்பலூா் நகராட்சியின் 5 ஆவது வாா்டு பழைய சிவில் கோா்ட் தெரு மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து சட்டப்பேரவை தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.
இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், ஆட்சியா், நகராட்சி ஆணையா் உள்ளிட்ட பலரிடம் முறையிட்டும் இப்பகுதியில் சாலை வசதி செய்து தராததைக் கண்டித்தும், 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யும் போக்கை சரி செய்ய வலியுறுத்தியும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா். இதுகுறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில் அப்பகுதி மக்கள் போட்டுவிட்டு சென்றனா்.
keywords: அடிப்படை வசதிகள், Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.