ஆறு மாதக் குழந்தையை அடக்கம் செய்யும் போது உயிர் இருந்தது கண்டு அதிர்ச்சி.

ஆறு மாதக் குழந்தையை அடக்கம் செய்யும் போது உயிர் இருந்தது கண்டு இன்ப அதிர்ச்சி.

கடந்த திங்கள்கிழமையன்று பிஹார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.   ஆறு மாதக் குழந்தையை அடக்கம் செய்யும் போது உயிர் இருந்தது கண்டு தந்தை உட்பட அங்கிருந்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

ரிக்ஸா இழுக்கும் தொழிலாளியான பவன் என்பவரின் ஆறு மாதக் குழந்தை தீபக் குமார். குழந்தைக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளனர்.

குழந்தை அசைவில்லாமல் இருந்ததைக் கண்டு குழந்தை இறந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர் தெரிவித்திருக்கிறார். பெற்றோர்களும் வருத்தத்துடன் குழந்தையை அடக்கம் செய்யத் தீர்மானித்து விட்டனர். குழந்தையை மயானத்தில் அடக்கம் செய்து மண்ணை போடும் போது குழந்தையின் அசைவைக் கண்டுள்ளனர். உடனே அருகிலுள்ள அரசு  மருத்துவமனைக்குக் குழந்தையைத் தூக்கிச் சென்று பார்த்தபோது உயிர் இருந்துள்ளது.

உடனடியாக தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளது. தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் பெற்றோர்களும் இதனால் மகிழ்ச்சியிலுள்ளனர்.

இந்த சம்பவத்தைப் பற்றி கைராபாத் காவல் நிலைய அதிகாரி கூறும் போது தமது வாழ்நாளில் இப்படியொரு சம்பவத்தை முதன்முதலாகப் பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

குழந்தை இறந்ததாக அறிவித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் தலைமறைவாகிவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply

%d bloggers like this: