அஞ்சல் துறை

அஞ்சல் துறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

33

Okinawa

அஞ்சல் துறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்.


இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஐடிஐ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

பணி : Skilled Artisans

காலிப் பணியிட விபரங்கள்

Motor Vehicle Mechanic – 02

Welder – 02 Tyreman – 02

Tinsmith – 01

Blacksmith – 01

வயது வரம்பு : மேற்கண்ட துறைவாரியான பணியிடங்களுக்கு 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வி மற்றும் இதர தகுதிகள் : சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,900

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு www.indianpost.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : The Senior Manager, Mail Motor Services, 134-A, S.K.Ahire MARG, Worli, Mumbai- 400 018

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 29.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMSMumbai.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணைப்பை கிளிக் செய்யவும்.

Kallaru TV
Leave a Reply

%d bloggers like this: