மிரட்ட வருகிறது அஞ்சலி நடித்த திகில் படம் ‘லிசா’

மிரட்ட வருகிறது அஞ்சலி நடித்த திகில் படம் ‘லிசா’


தமிழில் அஞ்சலி நடித்துள்ள திகில் படம் ‘லிசா’. இந்த படம் 3டி யில் தயாராகியுள்ளது. இந்தியாவின் முதல் 3டி திகில் படமாகும்.

யோகிபாபு, மைம்கோபி, சாம் ஜோன்ஸ், மார்க்கண்ட் தேஷ்பாண்டே  உள்பட பலர் நடித்துள்ள ‘லிசா’ படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்கியுள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையில் பிஜி முத்தையா ஒளிப்பதிவில் கவுதம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிஜி முத்தையாவின் பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

லிசா படத்தின் படப்பிடிப்புடன் தொழில்நுட்ப வேலைகள் நிறைவடைந்துவிட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே படத்தை வெளியிட தயாரான நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதமே இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என்றுதான் அறிவித்திருந்தார்கள். இடையில் சில தொழில் நுட்ப வேலைகளால் தாமதமாகலாம் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் திரைப்படம் வெளியாகும் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அஞ்சலி உள்பட படக்குழுவினர் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

91total visits,2visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: